திமுகவுக்கு கூட்டணி பயம்
ஆர்.பி.உதயகுமார், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதை விமர்சித்தார். “பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் புண்ணியம், அதிமுக வைத்தால் பாவமா? நீட் தேர்வு ரத்து குறித்து பாஜகவிடம் கேட்க முடியுமா என முதல்வர் கேட்கிறார். இது அவருக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை காட்டுகிறது,” என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவுக்கு இடமே இல்லை எனக் கூறியவர்கள், இப்போது கூட்டணி ஆட்சியா, தனி ஆட்சியா என பேசும் அளவுக்கு அதிமுக-பாஜக கூட்டணி வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
