26 பேர் பலியாக காரணமாக இருந்த பகல்ஹாம் தீவிரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவியதாக குல்காம் மாவட்டத்தின் கைமோ பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குப்வாரா பகுதியில் நடத்திய சோதனையில் AK-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. திரால், அனந்த்நாக், குல்காம் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.
19 பேர் கைது
இந்நிலையில், தேசதுரோக கருத்துக்களை பதிவிட்டதாக அசாம் மாநிலத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், திரிபுராவில் 4 பேரும், மேகாலயாவில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
My job is clear- to come down hard on Pro-Pakistani and Pro-Bangladeshi elements in Assam and to take stringent action against them. pic.twitter.com/AIQ0HvotIw
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 26, 2025
தொடர்ந்து சமூக வலைதள பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மட்டுமின்றி, வங்கதேசத்திற்கு ஆதரவாக செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார் .
முன்னதாக பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வரும் சூழலில், பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம் என அனைத்து ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தியிருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Delhi Cantonment,New Delhi,Delhi
April 27, 2025 12:39 PM IST
