எம்ஜிஆரின் வெற்றி மற்றவர்களுக்கு சாத்தியமில்லை
எம்ஜிஆரின் அரசியல் வெற்றி தனித்துவமானது என விளக்கிய பாலாஜி, “எம்ஜிஆர் 1957 இல் அரசியலுக்கு வந்து, 1967 இல் சட்டமன்ற உறுப்பினராகி, 1977 இல் ஆட்சியைப் பிடித்து 1987-இல் மறைந்தார். 20 ஆண்டுகள் அரசியல் பயணத்தில், திரைப்படங்கள் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தி, இளைஞர்களை அரசியலில் பக்குவப்படுத்தி, பொதுத்தொண்டு செய்ய வைத்தார். அதன் பின்னரே அவர் அரசியல் அரங்கில் பெருவெற்றி பெற்றார்,” என்றார். எம்ஜிஆர் போல் வெற்றி பெறுவது மற்றவர்களுக்கு சாத்தியமில்லை என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

