மண்ணோட மரியாதை
விஜய் பேசும்போது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும், இந்த மண்ணோட மரியாதை தான் முதலில் நினைவுக்கு வரும்.” என கோவையை முதலில் டார்கெட் செய்தார். தொடர்ந்து, “இது ஒட்டுகாக மட்டும் நடத்தும் கூட்டம் இல்லை. இதுவரை மற்றவர்கள் செய்தததை நாம் செய்ய போவதில்லை.
மக்களிடம் இருந்து எப்படி ஓட்டு வாங்க போகிறோம் என்பதை பற்றி மட்டுமல்லாமல், மக்களுடன் நாம் எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்குதான் இந்த பயிற்சி பட்டறை. இதுவரை நிறைய பேர்.. நிறைய பொய் சொல்லி ஆட்சியை பிடித்து இருக்கலாம். இனி அது இனி நடக்காது. நடக்க விட மாட்டோம்.
