Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மும்பை – ஐதராபாத்திற்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லலாமா…? 350 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் புதிய புல்லட் ரயில்…!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 27, 2025
in அரசியல் செய்திகள்
0
மும்பை – ஐதராபாத்திற்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லலாமா…? 350 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் புதிய புல்லட் ரயில்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


MHHSR திட்டம் என்றால் என்ன?

MHHSR வழித்தடம் என்பது 767 கி.மீ. நீளத்தை உள்ளடக்கி மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் திட்டமாகும். இந்த பாதையில் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. அவை பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு அணுகலை வழங்க கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் ஆறு அதிவேக ரயில் பாதைகளை அமைக்க 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தியாவின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரயில் பாதை உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், முதற்கட்டப் பணிகளுக்கான சர்வே மற்றும் ஆய்வுகள் 2020-ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து நடைபெற்று வருகின்றன.

புதிய புல்லட் ரயில் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தை எட்டும் திறனை இந்த புல்லட் ரயில் கொண்டுள்ளது. 11 நிறுத்தங்கள் மட்டுமே கொண்ட இந்தப் பாதை, சுரங்கப்பாதை மற்றும் உயர்நிலைப் பாதைகளைக் கொண்ட அதிவேக பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறையால், பயணிகள் மும்பைக்கும், ஹைதராபாத்துக்கும் இடையிலான தூரத்தை வெறும் மூன்று மணி நேரத்தில் கடக்க முடியும். தற்போது வரை வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரு நகரங்களுக்கு இடையே பயணிக்க சுமார் 14–16 மணிநேரம் ஆகிறது. இதை வெகுவாக குறைக்கவுள்ளது புல்லட் ரயில்.

இதையும் படிக்க: “இனி அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெருகும்…” – பிரதமர் மோடி பேச்சு

இந்த ரயில்களில் சுமார் 750 பயணிகள் வரை பயணிக்கலாம் என்றும் டிஜிட்டல் சிக்னலிங் அமைப்புகள் மற்றும் 25 kV AC மேல்நிலை மின்சாரம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சமாக, இந்த புல்லட் ரயில்களில் அவசர நிலநடுக்கக் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு (UrEDAS) இருக்கும். இது பூகம்பத்தின்போது ரயிலை தானாகவே பிரேக் செய்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

மும்பை-ஹைதராபாத் அதிவேக புல்லட் ரயில் பாதையில் முன்மொழியப்பட்ட 11 நிலையங்கள்:

பாந்த்ரா குர்லா வளாகம் (மும்பை)

நவி மும்பை

லோனாவலா

புனே

குர்கும்ப்/டவுண்ட்

அக்லுஜ்

பந்தர்பூர்

சோலாப்பூர்

கலபுரகி (குல்பர்கா)

ஜஹீராபாத்

ஹைதராபாத்

இதையும் படிக்க: காரில் எந்த கியரை பயன்படுத்தினால் எரிபொருள் மிச்சமாகும்? செலவை குறைக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்

குறைவான விலையில் பிரீமியம் தரத்திலான பயணம்

இந்த ரயிலுக்கான அதிகாரப்பூர்வ கட்டண அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், டிக்கெட் விலைகள் முதல் வகுப்பு ஏசி ரயில் டிக்கெட்டின் விலையை விட சுமார் 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால், இந்த ரயிலில் பயணிப்பவர்கள் அதிக விலை இல்லாமல் பிரீமியம் அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 27, 2025 11:03 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மும்பை – ஐதராபாத்திற்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லலாமா…? 350 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் புதிய புல்லட் ரயில்…!



.

Previous Post

ஜம்மு-காஷ்மீர்: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள்!

Next Post

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In