Last Updated:
பிகாரில் இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத பதிலடி கொடுக்கப்படும் என கூறினார்.
பஹல்காம் தாக்குதல் நடைபெற்று பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
மேலும் ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்காக வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் பிகாரில் இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத பதிலடி கொடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று ஜம்மு காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகர் மற்றும் உதம்பூர் செல்லும் நிலையில், எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவம் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதையும் படிக்க: TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்..! குரூப் 4 தேதியை அறிவிப்பு – எப்போது தெரியுமா?
சண்டையை தொடங்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி ராணுவ உயரதிகாரிகளை சந்தித்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
Jammu and Kashmir
April 25, 2025 11:09 AM IST

