Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.200 கொடுக்க மறுத்த தாய்.. சுத்தியலால் அடித்த மகன்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 26, 2025
in அரசியல் செய்திகள்
0
ரூ.200 கொடுக்க மறுத்த தாய்.. சுத்தியலால் அடித்த மகன்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 26, 2025 2:36 PM IST

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில், ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற இனத்தை சேர்ந்த நாயை வாங்குவதற்காக பணம் தர மறுத்ததால், ஓர் மகன் தனது தாயைக் கொன்ற ஒரு பரபரப்பான வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News18News18
News18

மகன் ஒரு நாய் வாங்க தன் தாயிடம் ரூ.200 கேட்டார். அதற்கு அவரது அம்மா பணம் கொடுக்க மறுத்ததால், அவர் தன தாயை சுத்தியலால் பலமுறை தாக்கினார். இந்த தாக்குதலில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி தலையிட வந்தபோது, ​​அவர் மனைவியையும் தாக்கினார். தற்போது அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராய்பூரின் உர்லா காவல் நிலையப் பொறுப்பாளர் பி.எல்.சந்திரகர் கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் தேவாங்கன் ரிக்‌ஷாக்காரர் ஆவார். நாய் வாங்குவது தொடர்பாக வீட்டில் ஒரு தகராறு ஏற்பட்டது. பணத்தை கொடுக்காததற்காக, 45 வயதுடைய பிரதீப் தேவாங்கன், தனது 70 வயது தாயார் கணேஷி தேவாங்கனை சுத்தியலால் தாக்கினார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது தாயைத் தாக்கியபோது, ​​அவர் படுக்கையில் இருந்தார். தாக்குதலுக்குப் பிறகு, படுக்கையிலும், தரையிலும் இரத்தம் கசிந்தது. இந்த தாக்குதலின் போது, வயதான பெண் கத்தத் தொடங்கியதும், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியான 35 வயதுடைய ராமேஸ்வரி தேவாங்கன் ஓடி வந்தார். அந்த தாக்குதலில் தலையிட முயன்றபோது, ​​கோபத்தில் இருந்த பிரதீப் தேவாங்கன் அவரையும் தாக்கினார். இந்த தாக்குதலில் மனைவியும் படுகாயமடைந்தார்.

தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட பிரதீப்பிற்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவத்தின் போது, ​​அவர்களது மூத்த மகன் பக்கத்து வீட்டிற்கு சென்று தன் அப்பாவின் தாக்குதல் குறித்து அவர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைவாக வீட்டிற்குள் வந்த போது, ​​வயதான பெண்ணின் சடலமும், மனைவி காயமடைந்தும் இருப்பதைக் கண்டனர். உடனடியாக பொதுமக்கள் போலீசாருக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வீட்டிற்கு அழைத்து வந்து செல்லப்பிராணியாக வளர்க்க விரும்பியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நாயின் விலை ரூ.800, அவரிடம் ரூ.600 இருந்தது, எனவே நாயை வாங்க அவருக்கு இன்னும் ரூ.200 தேவைப்பட்டது. அதனால் அவன் தன் தாயிடம் ரூ.200 கேட்டார், தாய் மறுத்ததால், அவரைக் கொன்றுவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ஏஎஸ்பி லகான் பட்டேல் தெரிவித்தார்.

எனவே தப்பி ஓடிய பிரதீப் தேவாங்கனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி ராமேஸ்வரி தற்போது மருத்துவ மேற்பார்வையில் உள்ளார், மேலும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார், இருப்பினும் இன்னும் அதிர்ச்சி நிலையில் உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 26, 2025 2:35 PM IST



.

Previous Post

பூத் கமிட்டி கூட்டம் என சொல்லி ரோட்ஷோ நடத்திய விஜய்! அச்சத்தில் திமுக, அதிமுக! அடேங்கப்பா!

Next Post

விஜய் சேதுபதியின் புதிய பட பெயர் இதுவா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய் சேதுபதியின் புதிய பட பெயர் இதுவா?

விஜய் சேதுபதியின் புதிய பட பெயர் இதுவா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In