ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நீ……ண்டுகொண்டே போகின்றது.
ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் பிடி கொடுக்க மறுக்கிறது. “நாங்கள் மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடுவோம்’ என்று அமெரிக்கா பயமுறுத்தி பார்த்தும் எந்த பலனும் இல்லை.
சமீபத்தில் லண்டனில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், அமெரிக்கா முன்வைத்த அம்சங்களை மறுத்து முறுக்கிக்கொண்டது உக்ரைன்.
உக்ரைனின் இந்தக் கோபத்திற்கு காரணம், அமெரிக்கா முன்வைத்த அம்சங்களில் மிக முக்கியமான இரண்டு – முன்னர் ரஷ்யாவிடம் இருந்த கிரிமியா ரஷ்யாவின் பிரதேசமாகவே தொடரும் மற்றும் உக்ரைன் நோட்டோவில் சேர முடியாது என்பதாகும்.
இந்த இரண்டுமே ரஷ்யாவிற்கு சாதகமானவை. இது தான் உக்ரைனின் பெரும் கோபத்திற்கு காரணம்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அவர் பேசிவரும் பெரும்பாலானவை ரஷ்யாவின் பக்கமே இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் நட்புடன் தான் உள்ளனர் எனபது உலகறிந்த விஷயம்.