Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சித்தியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த போலீஸ்காரர்.. கண்டித்த இளைஞர் சினிமா பாணியில் கொலை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2025
in அரசியல் செய்திகள்
0
சித்தியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த போலீஸ்காரர்.. கண்டித்த இளைஞர் சினிமா பாணியில் கொலை.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவர், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருடன் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த சாய் பிரகாஷ் என்ற இளைஞர், தனது சித்தி நிர்மலாவை கண்டித்துள்ளார். ஆனால், சீனிவாஸ் காவலர் என்பதால், உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள், காவலர் சீனிவாசை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். பின்னர், டிசம்பர் மாதம் சீனிவாஸ் மீண்டும் பணியில் சேர்ந்ததும், தன் மீதான நடவடிக்கைக்கு காரணமான சாய் பிரகாஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி சரியான சமயத்திற்காக காத்திருந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி சாய் பிரகாஷ், காவலர் சீனிவாசின் சொந்த ஊரான ஹனுமகொண்டாவுக்கு காரில் சென்றுள்ளார். இந்த தகவலை, அவரின் சித்தி நிர்மாலா, தனது ரகசிய காதலன் சீனிவாசுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கூலிப்படையினர் 4 பேருடன் காத்திருந்த சீனிவாஸ், காருடன் இளைஞரை கடத்தியுள்ளார். அப்போது, சாய் பிரகாசை கடுமையாக தாக்கி, சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதே காரில் உடலை ஹசினாபாத் கொண்டு சென்று, அங்குள்ள பாழடைந்த கிணற்றிவில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து சாய் பிரகாஷை, காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின்பேரில் காவலர் சீனிவாஸை பிடித்து விசாரித்தனர். அதில், தனது ரகசிய காதலுக்கு தடையாக இருந்ததுடன், பணி இடைநீக்கம் செய்ய காரணமாக இருந்த கோபத்தில் கூலிப்படையை பயன்படுத்தி சாய் பிரகாஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சீனிவாஸ், நிர்மலா மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை சாலையில் தரதரவென இழுத்து சென்று ஆவேசமாக தாக்கிய குடும்பத்தினர்… என்ன நடந்தது?

பின்னர், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ரகசிய காதலை உயரதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்த இளைஞரை, காவலரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 23, 2025 6:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

போலீஸ்காரரின் ரகசிய காதல் அம்பலம்.. போட்டுக் கொடுத்த இளைஞர் கொலை.. சஸ்பெண்ட் ஆனதால் வெறிச்செயல்!



.

Previous Post

500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!

Next Post

பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனையை தொடங்கியது ஏன்? பஹல்காம் படுகொலைக்குப் பின் பாகிஸ்தான் செய்வது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனையை தொடங்கியது ஏன்? பஹல்காம் படுகொலைக்குப் பின் பாகிஸ்தான் செய்வது என்ன?

பாகிஸ்தான் திடீரென ஏவுகணை சோதனையை தொடங்கியது ஏன்? பஹல்காம் படுகொலைக்குப் பின் பாகிஸ்தான் செய்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In