Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விசா, ஒப்பந்தம் நிறுத்தம்..! பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ன..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2025
in அரசியல் செய்திகள்
0
விசா, ஒப்பந்தம் நிறுத்தம்..! பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ன..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு படைகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்துவதுடன், தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடன் 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதேபோல், இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார். உரிய ஒப்புதலுடன் வந்தவர்கள், வரும் மே 1 ஆம் தேதிக்குள் அந்த வழியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர்கள் வர ’சார்க்’ விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த விசா சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசா பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை, விமானப்படை சார்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் அல்லாதவர்கள் உடனடியாக இந்தியவுக்கு திரும்ப வேண்டும் என்றும் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், காஷ்மீரில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

Location :

Jammu and Kashmir

First Published :

April 24, 2025 6:47 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

விசா, ஒப்பந்தம் நிறுத்தம்..! பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்ன..?



.

Previous Post

‘சமரசம் பேசுவோம்; ஆனால் சரணடைய மாட்டோம்’ -உக்ரைன் திட்டவட்டம்

Next Post

பேரவையில் இன்று…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேரவையில் இன்று…

பேரவையில் இன்று...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In