Last Updated:
ஏப்ரல் 30 ஆம் தேதி வரை உள்ள விமான பயணங்களுக்கு பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பல்வேறு தரப்பினர் காஷ்மீருக்கு செல்ல இருந்த சுற்றுலா பயணிகள் தங்களுடைய விமான டிக்கெட் புக்கிங்களை கேன்சல் செய்ததை தொடர்ந்து புதன்கிழமை அன்று EaseMy Trip ஃபவுண்டர் மற்றும் சேர்மன் ஆன நிஷாந்த் பிட்டி பயணிகள் அனைவரும் அனைத்து புக்கிங்களையும் இலவசமாக வேறு ஒரு தேதிக்கு மாற்றி அமைக்கவும், கேன்சல் செய்வதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை உள்ள விமான பயணங்களுக்கு பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து EaseMy Trip ஃபவுண்டர் மற்றும் சேர்மன் நிஷாந்த் பிட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விமான பயணிகளுக்கு போதுமான வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏப்ரல் 22 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட் புக்கிங் தேதி மாற்றம் மற்றும் கேன்சல் போன்றவற்றிற்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை பயணிக்கலாம். ஸ்ரீநகரில் தற்போது நடந்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு EaseMy Trip ஸ்ரீநகருக்கு அல்லது ஸ்ரீநகரில் இருந்து பயணிக்கும் எங்களுடைய கஸ்டமர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது கருதி நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இது ஒரு எதிர்பாராத சூழ்நிலை என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் உங்களுடைய பயணத் திட்டத்தில் எந்த ஒரு அசௌகரியமும் ஏற்படக் கூடாது என்பதே எங்களுடைய நோக்கம்”, என்று பதிவு செய்திருந்தார்.
மேலும் “அதே சமயத்தில் ஏர்லைன்ஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தகவல்களை சேகரித்து அவ்வப்போது உங்களுக்கு அப்டேட்டுகளை வழங்குவோம். உங்களுடைய பாதுகாப்பு மற்றும் சௌகரியம் எங்களுடைய முதல் முன்னுரிமையாக இருக்கும்”, என்றும் அவர் கூறினார். முன்னதாக ஸ்ரீநகருக்கு விமான டிக்கெட்டுகள் பெறுவதற்கான டிமாண்ட் அதிகமாக இருந்த பட்சத்தில் DGCA விமான நிறுவனத்திடம் ஸ்ரீநகருக்கு செல்லும் விமானங்கள் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இதையும் படிங்க: வாகா எல்லை மூடல்.. பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு.. – மத்திய அரசு அறிவிப்பு
அது மட்டுமல்லாமல் விமான டிக்கெட்டுகளை கேன்சல் செய்தல் மற்றும் தேதிகளை மாற்றி அமைத்தல் போன்றவைகளுக்கு ஆகக்கூடிய கட்டணங்களை தள்ளுபடி செய்யும்படியும், இந்த கடினமான நேரத்தில் சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் சவால்களுக்கு தேவையான அனைத்து உதவியை வழங்கும் படியும் கோரிக்கை விடுத்திருந்தது. ஏப்ரல் 22 அன்று அல்லது அதற்கு முன்பு பதிவு செய்த விமான டிக்கெட்டுகளை கேன்சல் செய்தல் அல்லது தேதியை மாற்றி அமைப்பதற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக புதன்கிழமை அன்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 2 சிறப்பு விமானங்கள் விமானங்களையும் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. “ஸ்ரீநகரில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விமான பயண தேதி மாற்றி அமைத்தல் அல்லது கேன்சல் செய்வதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்கிறோம். மேலும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று இரண்டு சிறப்பு விமானங்களை இயக்க உள்ளோம்”, என்று இண்டிகோ X தளத்தில் பதிவு செய்தது.
“ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு விமான பயண தேதியை மாற்றி அமைத்தல் அல்லது கேன்சல் செய்வதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இது ஏப்ரல் 22 அன்று அல்லது அதற்கு முன்பு புக்கிங் செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கு பொருந்தும்”, என்றும் கூறியிருந்தது. கூடுதலாக இன்று, ஏப்ரல் 23 அன்று டெல்லி மற்றும் மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு மற்றும் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு 2 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் தீவிரவாத தாக்குதலை அடுத்து சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை கைது செய்வதற்காக பாதுகாப்பு படையினர் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
April 23, 2025 9:53 PM IST

