Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்? – ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ வெளியிட்ட அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 23, 2025
in அரசியல் செய்திகள்
0
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்? – ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ வெளியிட்ட அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எப்போதும் போல காஷ்மீரின் அழகை ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு, நேற்றைய நாள் அப்படி அமையவில்லை. பஹல்காமில் குடும்பம் குடும்பமாக காஷ்மீரை ரசித்துக்கொண்டிருந்தவர்களை, திடீரென வந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (the Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதி ஹசீஃப் சையத்தின் லக்ஷர் இ தொய்பாவின் மற்றொரு பிரிவு இது. இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், உள்ளூர் காரர்கள் அல்லாத 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த பகுதியில் வெளி ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல அந்த இடத்திற்கு வந்து வசிப்பதாகவும், பின்னர், நிலத்தை சொந்தமாக்குவதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அதன் விளைவாக சட்டவிரோதமாக அங்கு குடியேறுபவர்கள் மீது வன்முறை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. காஷ்மீரின் சுயாட்சி நீக்கப்பட்ட பிறகு 2019ம் ஆண்டு, TRF அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆன்லைன் மூலமாக ஆட்கள் சேர்ப்பு, சட்டவிரோத நுழைவு, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி கடந்த ஆண்டு இந்திய அரசு தடை செய்தது. மேலும் அந்த அமைப்பின் கமாண்டரான ஷேக் சஜத் கல் என்பவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கல்யாணம் முடிந்து 6 நாட்கள் தான்.. நெஞ்சை உலுக்கும் போட்டோ.. ஹனிமூனுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்!

2020 ஏப்ரல் 1ம் தேதி இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோடு பகுதியில், ராணுவத்தினர் மற்றும் இந்த அமைப்புக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பாரா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான தளத்தில் நடந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு கடைசியாக இந்த அமைப்பு பொறுப்பேற்றது.

பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மீது பல முறை தாக்குதல் நடத்தி உள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி, ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட 172 தீவிரவாதிகளில் 108 பேர் டிஆர்எஃப் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், டிஆர்எஃப் கமாண்டரான கல்-ஐ பிடித்தது தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனறு என்ஐஏ அறிவித்தது.

இந்நிலையில், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதற்கு நியாயம் கூற நினைக்கும் இந்த அமைப்பை சேர்ந்தவர்களை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Location :

Jammu and Kashmir

First Published :

April 23, 2025 3:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்? – ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ வெளியிட்ட அறிவிப்பு!



.

Previous Post

’இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Next Post

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In