இதனைத் தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் புகார், வரதட்சணை கோரியதாகவும், இருட்டுக்கடை உரிமத்தை கேட்டு சித்திரவதை செய்ததாகவும் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
