April 23, 20258:17 AM IST
Tamil Live Breaking News : “70 வெளிநாட்டு தீவிரவாதிகள் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம்”
ஜம்மு காஷ்மீரில் 70 வெளிநாட்டு தீவிரவாதிகள் எந்நேரமும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுவரை பஹல்காம் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருவதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் முன்னரே எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
