இதைப் போய் மோடியிடம் சொல்லு!
மூன்று, நான்கு பேர் எங்களை தாக்கினார்கள். நான் அந்தத் தீவிரவாதிகளிடம், “என் கணவரைக் கொன்று விட்டீர்கள், எங்களையும் கொன்று விடுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு, அங்கிருந்த ஒரு தீவிரவாதி, ‘போ… இதைப் போய் மோடியிடம் சொல்லு’ என்றான். அங்கிருந்த அப்பகுதி மக்கள்தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். என் கணவரின் உடலை மலையிலிருந்து, சீக்கிரம் கீழே கொண்டுவந்து சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல உதவுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
இரணுவத்தினர், மீட்புப் படையினர், பாதுகாப்பு படையினர் விரைந்து அப்பகுதிக்குச் சென்று பாதுகாப்பு பணியில், விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்தவுடன், சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டறிந்திருக்கிறார். அதேபோல அமித் ஷாவும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். அமித் ஷா சம்பவ இடத்திற்கு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
