திவாரி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவின் கருத்துகளை குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டுமென்றால், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளை மூடிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அமர்வு திவாரியிடம், ”குற்றச்சாட்டுகளிலும் கூட, நிறுவனத்தின் கண்ணியம் மற்றும் மரியாதையைப் பேண வேண்டும். ரிட் மனுவில், கொடுக்கப்பட்ட கூற்றுகளும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.” என்று கூறியது.
