குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“தேசிய குடிமைப் பணிகள் நாளில், நமது மக்களாட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் உறுதிப்பாடு மிக்க குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
