Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" – மல்லை சத்யா சொல்வது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 20, 2025
in அரசியல் செய்திகள்
0
மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" – மல்லை சத்யா சொல்வது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

துரை வைகோவுக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களால்தான் துரை வைகோ ராஜினாமா செய்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

மதிமுக
மதிமுக

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு மதிமுக முதன்மைச் செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த துரை வைகோ, தமது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே நிர்வாகக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து மல்லை சத்யா பேசியிருக்கிறார்.


துரை வைகோ Vs மல்லை சத்யா: வெடித்துக் கிளம்பிய உட்கட்சி பஞ்சாயத்து!

“என் அரசியல் முகவரியாக விளங்கிக் கொண்டிருக்கிற, குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னைக் குன்றின் மேல் வைத்து அழகு பார்க்கும் அன்புத் தலைவர் வைகோ சொன்னதுதான் இங்கு நடந்தது.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும்.

என்னுடைய நடவடிக்கைகள் அவரைக் காயப்படுத்தி இருக்குமேயானால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் தொடர்ந்து கழகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனச் சொல்லி இருக்கிறேன். அவரும் அதை ஏற்று பரிசீலனைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்.

மதிமுக
மதிமுக

இணைந்த கைகளுக்கு எப்போதுமே வலிமை அதிகம். நாங்கள் இணைந்து இருப்போம். மனிதன் பலகீனமானவன். ஒரு காற்று கீழே தள்ளிவிடும். கல் கூட கீழே இடற வைத்துவிடும். ஆனால் மனிதர்கள் பலமானவர்கள். பலமான மனிதர்கள் மலையைக் கூட உடைத்தெறியக் கூடிய சக்தி படைத்தவர்கள்.

நானும் சகோதரர் துரை வைகோவும் இணைந்து, லட்சியத் தலைவர் வைகோ கண்ட கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்” என்றுத் தெரிவித்திருக்கிறார். 

“துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி..” – மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

’மல்லை சத்யாவின் அரசியல் வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன்!’ மதிமுகவின் துரை வைகோ உருக்கம்!

Next Post

’துரை வைகோ முன் மல்லை சத்யா சொன்ன பஞ்ச்!’ குலுங்கு சிரித்த செய்தியாளர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’துரை வைகோ முன் மல்லை சத்யா சொன்ன பஞ்ச்!’ குலுங்கு சிரித்த செய்தியாளர்கள்!

’துரை வைகோ முன் மல்லை சத்யா சொன்ன பஞ்ச்!’ குலுங்கு சிரித்த செய்தியாளர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In