ஆளுநர் ரவி, டெல்லியில் முகாமிட்டு, அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தயாரித்து வருகின்றன. இதில், குடியரசு தலைவர் மூலம் உச்சநீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனை கோருவது அல்லது அவசர சட்டம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான சட்டரீதியான மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளதால், மத்திய அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
