பயனாளிகளுக்கு வாழ்த்து மற்றும் அழைப்பு
கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெறும் அனைவரையும் வாழ்த்திய முதலமைச்சர், “இந்த சிறு உதவியை பயன்படுத்தி, உயர்ந்து, வளர்ந்து, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அளவுக்கு உயர வேண்டும்,” என்று அழைப்பு விடுத்தார். “முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவரின் கூற்றை உணர்ந்து, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உங்கள் தொழிலையும், குடும்பத்தையும், பகுதியையும் வளப்படுத்துங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.

