சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று கூறிய இபிஎஸ் தற்போது தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளார்.
சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா, கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்தையையும் முடித்து கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்ட பின்னரே தில்லி சென்றார்.
இதையடுத்து தேர்தல் பணிகளில் அதிமுக – பாஜக கூட்டணி இறங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.
