எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதத்திற்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும்.
திருமணத்திற்கு முன்பே, திருமணம் நடக்கின்ற அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத்தான் பிறக்கும்.
முன் கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆகும் அன்றே குழந்தை பிறக்கும். எனவே, வருபவர்களிடம் ஆத்திரப்பட்டுப் பேசுவதால், கோபப்பட்டுப் பேசுவதால், திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும்.
அவர்களிடம் அனுசரித்து, “வேலை எல்லாம் செய்து கொடுங்கள்’னு கேட்கனுமே தவிர, விதண்டாவாதமாகப் பேசக்கூடாது.

உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் எனச் சட்டம் இல்லை. உங்களின் தேவைகளை அறிந்து கடமையைச் செய்ய வந்துள்ளோம்” என்றார்.
இப்படி கல்யாணசுந்தரம் சர்ச்சையாகப் பேசிக்கொண்டிருக்கச் சட்டென முகம் சுழித்த அமைச்சர் கோவி.செழியன், புத்தகம் ஒன்றை எடுத்துப் படிப்பது போல் முகத்தை மறைத்துக் கொண்டார்.
எம்.எல்.ஏ அன்பழகன் தலையில் கை வைத்துக் கொண்டார். சீனியரான கல்யாணசுந்தரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்வதாக அங்கிருந்தவர்கள் புலம்பினர்.
