Last Updated:
பெங்களூரு அருகே மறுவாழ்வு மையத்தில் நோயாளி தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூரு அருகே உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நெலமங்கலாவிலுள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் வார்டனின் துணிகளை துவைக்கவும், கழிப்பறையை சுத்தம் செய்யவும் மறுத்ததால் நோயாளி ஒருவரை அங்கிருந்தவர்கள் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் படி, ஒரு நோயாளி மற்றொருவருடன் ஒரு அறையில் உள்ளார். அப்போது வந்த 3 பேரில் ஒருவர், ஒரு குச்சியை வைத்து அந்த நோயாளியை ஈவு இரக்கமில்லாமல் தாக்குகிறார். சிறிது நேரத்திற்கு பிறகு அடிப்பவர் சோர்வடைவது போன்றும், அங்கிருந்த இருவர் அந்த நோயாளியை பிடித்த பிறகு மீண்டும் அவர் அந்த நோயாளியை கடுமையாக தாக்குவதை போன்றும் அந்த வீடியோ அமைந்துள்ளது.
A horrifying incident has come to light from a rehabilitation centre in Bengaluru, exposing the complete collapse of law and order in the area. An inmate was brutally thrashed over 30 times by staff members after he reportedly refused to wash the warden’s clothes and clean the… pic.twitter.com/C5m3gsviEy
— Karnataka Portfolio (@karnatakaportf) April 15, 2025
இந்த வீடியோ வைரலானதை அடுத்து காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். சம்பவம் குறித்து விளக்கமளித்த காவல்துறை, இந்த சம்பவம் முன்பே நடந்தது என்றும், இதையடுத்து அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
April 16, 2025 10:38 AM IST

