ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்த செங்கோட்டையன், “எத்தனையோ வேலைகளை விட்டுவிட்டு, இந்த அநீதியை எதிர்த்து நீங்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி,” என உருக்கமாக கூறினார். மேலும், கொடிவேறு அணையையும், காவிரிபாளையம் ஏரியையும் சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
