Last Updated:
Good Friday 2025: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாட்காட்டியின்படி, பெரும்பாலான மாநிலங்களில் உள்ள வங்கிகள் இந்த நாளில் மூடப்பட்டிருக்கும்.
கிறிஸ்தவ மக்களின் புனித நாளான புனித வெள்ளி வரும் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த நாளில் வங்கிகள் திறந்திருக்குமா? அல்லது மூடப்படுமா? என்பது குறித்து பலரும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் ஒரு முக்கிய கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி இந்த ஆண்டு ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் வங்கிகள் திறந்திருக்குமா? அல்லது மூடப்படுமா? என்பது குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை நாட்காட்டியின்படி, பெரும்பாலான மாநிலங்களில் உள்ள வங்கிகள் இந்த நாளில் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நாடு முழுவதும் இது பொது விடுமுறை அல்ல என்பதால் சில மாநிலங்களில் வங்கிகள் திறந்திருக்கும் என்று தெரிகிறது.
RBI-இன் விடுமுறை பட்டியலின்படி, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களை தவிர அனைத்து மாநிலங்களிலும் பிராந்தியங்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், புனித வெள்ளி விடுமுறைக்கு முன் ஏதேனும் அவசர வங்கிப் பணிகள் இருந்தால் அதை விரைந்து முடிப்பது நல்லது.
Also Read: பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஓடும் ரயிலில் ATM வசதி அறிமுகம்.. மத்திய ரயில்வே அசத்தல் திட்டம்!
பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் ஏப்ரல் 19ஆம் தேதி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் திறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து, ஏப்ரல் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் பின்வரும் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கீழ்வரும் சேவைகளை பயன்படுத்தலாம்.
- ஏடிஎம் சேவைகள்
- மொபைல் வங்கி வசதி
- இணைய வங்கி
- UPI மற்றும் பிற ஆன்லைன் கட்டண முறைகள்
April 17, 2025 11:14 AM IST

