Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

10 நாட்களில் திருமணம்.. மருமகனுடன் மணப்பெண்ணாகத் திரும்பி வந்த மாமியார்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 18, 2025
in அரசியல் செய்திகள்
0
10 நாட்களில் திருமணம்.. மருமகனுடன் மணப்பெண்ணாகத் திரும்பி வந்த மாமியார்.. சொன்ன காரணம் தான் ஹைலைட்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 17, 2025 11:29 AM IST

உத்தரபிரதேசத்தில், மகளின் வருங்கால கணவருடன் மாமியார் ஓடிப்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் மது பழக்கத்தால் துன்புறுத்தியதால், மாமியார் இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

News18News18
News18

மகளுக்கு 10 நாட்களுக்குள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வருங்கால மருமகனுடன் மாமியார் ஓடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரின் மந்த்ராக் காவல் நிலையப் பகுதியில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில் வசிப்பவர் ஜிதேந்திர குமார். இவர் தனது மகள் ஷிவானிக்கு உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் வேலை பார்த்து வந்த ராகுலை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக நிச்சயமும் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திருமணம் நேற்று (ஏப்ரல் 16) நடக்கவிருந்தது. திருமண அழைப்பிதழ்கள் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.

தொடர்ந்து இரு குடும்பங்களும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு ஜிதேந்திராவின் மனைவி அப்னா தேவி என அழைக்கப்படும் அனிதா தனது வருங்கால மருமகன் ராகுலுடன் ஓடிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. மாமியார் வருங்கால மருமகனுடன் ஓடிவிட்டார் என்ற செய்தி தீயாய் பரவ, வலைதளங்களில் கவனம் ஈர்த்து. காவல்துறையில் புகார் அளிக்கப்பட, தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்தது வந்தது.

10 நாட்களுக்கு பின் தப்பிச் சென்ற மருமகனும், மாமியாரும் நேபாள எல்லையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது மருமகனுடன் ஓடிப்போனதற்கான உண்மையான காரணத்தை, போலீசாரிடம் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார் மாமியார் அப்னா தேவி. அதன்படி, மருமகனுடன் செல்ல தனது கணவர் தான் காரணம் என்றும், கணவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் கூறியுள்ளார்.

போலீசாரிடம் அப்னா தேவி பேசுகையில், “கணவர் ஜிதேந்திரா காலையிலிருந்து மாலை வரை மது அருந்துவார். ஆறு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பார். இதுவரை அந்த மனிதரால் வீடு கட்ட முடியவில்லை. தினமும் ரூ.1500 கேட்டு என்னை அடித்து துன்புறுத்துவார். என் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் மருமகனுடன் பேசியதை கணவர் சந்தேகப்பட்டார். எனது மகளோ என்னை கிண்டல் செய்தார்.

Also Read | “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரை கிடையாது.. இனியும் இல்லை” – அதிமுக எம்பி தம்பிதுரை!

என்னையும் மருமகனையும் தொடர்புபடுத்தி என் மீது மோசமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி துன்புறுத்துவார். நான் எவ்வளவோ மறுத்தும் மீண்டும் மீண்டும் அதையே சொல்லி, ‘நீ உன் மருமகனுடன் ஓடிப்போ’ என்று கூறினார். மருமகனுடன் ஓடிப்போகச் சொல்லி தினமும் கூற ஆரம்பித்தார். அவரின் தொந்தரவை தாங்க முடியாமல் விரக்தியில் அவர் சொன்னதையே செய்தேன். இப்போது என் வாழ்க்கையில் யார் வந்தாலும், மருமகன் ராகுலுடனேயே இருப்பேன். எங்களைத் தனியாக விடுங்கள்.

வீட்டிலிருந்து வெளியேறும்போது எனது மொபைலையும் ரூ.200ஐயும் மட்டுமே எடுத்துச் சென்றேன். அதுபோக, ​​என் காலில் கொலுசும், கழுத்தில் தாலியும் மட்டுமே இருந்தது. மற்றபடி எனது கணவர் கூறுவது போல் 3.5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. அது பொய். நாங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை. ஆனால், நான் ராகுலுடன் செல்ல விரும்புகிறேன். அவருடன் வாழ விரும்புகிறேன். விவாகரத்து நடந்தாலும் இல்லாவிட்டாலும், நான் ராகுலுடன் மட்டுமே இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

First Published :

April 17, 2025 11:27 AM IST



.

Previous Post

இதழியலின் அஞ்சா நெஞ்சா்!

Next Post

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In