தாக்குதல் பின்னணி
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த சின்னதுரையை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், சின்னதுரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செல்போன் செயலி மூலம் பழகிய ஒரு நண்பரின் அழைப்பை ஏற்று, தனிமையான பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாகக் கூறி உள்ளார். அங்கு, ஐந்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாகவும், அவரது செல்போன் பறிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.சின்னதுரை சென்ற பகுதி திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் உலாவும் இடம் என்பதால் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
