Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால் மருத்துவமனைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2025
in அரசியல் செய்திகள்
0
புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால் மருத்துவமனைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உத்தரப்பிரதேச குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது. நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள், குழந்தை கடத்தல் வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டது. உத்தரவுகளை செயல்படுத்துவதில் ஏதேனும் அலட்சியம் இருந்தால், அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் பெஞ்ச் கூறியது.

மேலும், குழந்தைகள் கடத்தல் வழக்குகளில் நிலுவையில் உள்ள விசாரணைகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்குகள் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் பெஞ்ச் உத்தரவிட்டது. குழந்தை கடத்தல் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், எந்தவொரு மருத்துவமனையின் உரிமத்தையும் உடனடியாக ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் பிரசவித்த பிறகு, அவரது குழந்தை திருடப்பட்டால், முதலில் அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரப்பிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை விசாரிக்கும்போது நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமின் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அலட்சியமாக வழக்கை கையாண்டதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. மேலும், இந்த வழக்கை கையாண்ட விதம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தையும், உத்தரப்பிரதேச அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

இதையும் படிக்க: பாரத ரத்னா மற்றும் நிஷான்-இ-பாகிஸ்தான் விருதுகள்… இரண்டையும் பெற்ற ஒரே இந்தியர்… யார் தெரியுமா?

ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் அலட்சியமாக கையாண்டதால், பல குற்றவாளிகள் இப்போது தலைமறைவாகினர். இந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். ஜாமின் வழங்கும்போது, ​​உயர்நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒரு நிபந்தனையை விதித்திருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் இழந்தனர் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பெங்களூரு – சென்னை விரைவுச் சாலையை கோலார் நெடுஞ்சாலையுடன் இணைக்க புதிய சாலை…! NHAI திட்டம்

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உத்தரப்பிரதேச அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டது. உத்தரப்பிரதேச அரசு இந்த விஷயத்தைக் கையாண்ட விதத்தில், அமர்வு முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளதாக நீதிபதி பர்திவாலா கூறியுள்ளார். ஏனெனில், இந்த வழக்கு தொடர்பாக அரசாங்கம் மேல்முறையீடு செய்யவில்லை, எந்த தீவிரமும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு குழந்தை ஆசை இருந்ததாகவும், பின்னர் ரூ.4 லட்சத்திற்கு ஒரு மகனைப் பெற்றதாகவும் தெரிகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட ஜாமினையம் நீதிமன்றம் ரத்து செய்தது.

First Published :

April 16, 2025 5:40 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால் மருத்துவமனைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



.

Previous Post

தாம்பரம் – கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

Next Post

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In