Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

5 வயது சிறுமியை கொன்ற நபர்.. கடத்திச் செல்லும் பகீர் சிசிடிவி காட்சி.. ஒரேநாளில் என்கவுன்ட்டர் செய்த ‘லேடி சிங்கம்’!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 16, 2025
in அரசியல் செய்திகள்
0
5 வயது சிறுமியை கொன்ற நபர்.. கடத்திச் செல்லும் பகீர் சிசிடிவி காட்சி.. ஒரேநாளில் என்கவுன்ட்டர் செய்த ‘லேடி சிங்கம்’!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு வேலை செய்து வரும் பெண் பணிக்குச் சென்ற நிலையில், அவரது 5 வயது பெண் குழந்தை, அந்த வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் அவ்வழியாக சென்ற பிகாரைச் சேர்ந்த புலம்பெயர்த் தொழிலாளியான ரித்தேஷ் குமார் சாக்லேட்டை காட்டி சிறுமியை கடத்திச்சென்றார்.

அடுத்த சில நிமிடங்களில் குழந்தை அருகில் உள்ள ஒரு பகுதியில் சடலமாக கிடந்தார். சிறுமியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தினர். இதனால் ஹுப்ளியில் உள்ள அசோக்நகர் காவல்நிலையத்தின் முன்பு பெரும் பரபரப்பு நிலவியது. கொலை செய்தவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஞாயிற்றுக்கிழமையே மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட ரித்தேஷை கைது செய்தனர். இதையடுத்து அவர் தங்கியிருந்த வீட்டுக்கு, விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது காவலர்களை தாக்கிவிட்டு ரித்தேஷ் தப்பியோட முயற்சித்துள்ளார். இந்நிலையில் பல முறை எச்சரித்தும் ரித்தேஷ் காவலர்களை தாக்கத் தொடங்கினார். இதில் பெண் உதவி ஆய்வாளர் அன்ன பூர்ணா காயமடைந்தார். ரித்தேஷை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி சுட்ட அன்னபூர்ணா, சரணடையும்படி கோரினார்.

Also Read | iPhone, iMac-ல் உள்ள i எழுத்தின் அர்த்தம் என்ன? – ஒன்றல்ல.. 5 அர்த்தங்கள் இருப்பது தெரியுமா?

எனினும் ரித்தேஷ் தாக்குதலை தொடர்ந்ததால், அவரின் கால்கள் மற்றும் முதுகில் காவலர்கள் சுட்டனர். இதில் ரித்தேஷ் உயிரிழந்தார். தொண்டர் சிறுமியை கொன்றவரை சுட்டுக்கொன்ற காவல் உதவி ஆய்வாளர் அன்ன பூர்ணாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

யார் இந்த அன்னபூர்ணா?

பாராட்டுகளை பெற்று வரும் அன்னபூர்ணா, பெல்காமில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்த அன்ன பூர்ணா, விடா முயற்சியில் MSc வரை படித்துள்ளார். காவல்துறை தேர்வில் வெற்றி பெற்று 2018-ல் உதவி ஆய்வாளராக தேர்வானார். 5 வயது சிறுமியை கொலை செய்தவரை, தீரத்துடன் சுட்டுக்கொன்ற அன்னபூர்ணாவை அவரின் குடும்பத்தினரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

कर्नाटक के हुबली में 5 साल की बच्ची से रेप का प्रयास, शोर मचाने पर हत्या की। पुलिस ने आरोपी नितेश कुमार (उम्र 35 साल) को एनकाउंटर में मार गिराया। मजदूर की बेटी को नितेश गोद में उठाकर ले गया था। pic.twitter.com/qu0c8tq87C


— Sachin Gupta (@SachinGuptaUP) April 14, 2025

ரித்தேஷ் தாக்கியதில் காயமடைந்த அன்ன பூர்ணாவுக்கு கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 5 வயது சிறுமியை கொலை செய்தவரை ஒரே நாளில் பிடித்ததோடு, தப்பிக்க முயன்றவரை சுட்டுக்கொன்ற உதவி ஆய்வாளர் அன்னபூர்ணாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 16, 2025 1:38 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

5 வயது சிறுமியை கொன்ற நபர்.. கடத்திச் செல்லும் பகீர் சிசிடிவி காட்சி.. ஒரேநாளில் என்கவுன்ட்டர் செய்த ‘லேடி சிங்கம்’!



.

Previous Post

வக்ஃப் சட்ட திருத்தம்: டெல்லி உயர்நீதிமன்றக் கட்டிடம் வக்ஃப் நிலமா?.. உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்!

Next Post

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In