மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று தெரிவித்திருகிறார்.
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின், “மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழு ஜனவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்’ என அறிவித்தார்.
