Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் : இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 16, 2025
in அரசியல் செய்திகள்
0
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் : இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டமாக அமலுக்கு வந்தது.

இந்நிலையில், வக்ஃப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மனுத் தாக்கல் செய்தன. இதேபோல, இஸ்லாமிய அமைப்புகள், தனிநபர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவை அனைத்தும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், அசாம் ஆகிய பாஜக ஆளும் 6 மாநில அரசுகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இன்று முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம்… உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முதல்முறையாக ஆலோசனை

மேலும், தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளனர்.

First Published :

April 16, 2025 7:00 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை



.

Previous Post

சேப்பாக்கம் மைதான ஆடுகளம்: எம்.எஸ். தோனி கருத்து

Next Post

இன்று நல்ல நாள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செலவு காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று நல்ல நாள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In