தில்லியில் 3 நாள்கள் தங்கினால தொற்று ஏற்பட்டுவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தில்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக பல சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீடு அறிக்கையில், ‘தில்லியில் இருப்பவர்களின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் குறைந்துவிடும்’ என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், இந்தியாவின் மிக முக்கிய சுகாதார எச்சரிக்கை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி மும்பையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி,
“தில்லி நகரில் சிறிது நேரம் தங்குவதுகூட சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும். தில்லியில் மூன்று நாள்கள் தங்கினாலே தொற்றுகள் ஏற்பட்டுவிடும். தில்லி, மும்பை என இரண்டு நகரங்களும் மாசுபாட்டிற்கான சிவப்பு எச்சரிக்கையில் உள்ளன. எனவே, சுற்றுச்சூழலுக்கு நாம் உடனடியாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
