Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்பேத்கர் யார்? வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா? விரிவான பார்வை!| Ambedkar remembrance day article

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 14, 2025
in அரசியல் செய்திகள்
0
அம்பேத்கர் யார்? வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா? விரிவான பார்வை!| Ambedkar remembrance day article
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


குறிப்பாக, அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்டத்தொகுப்பு மசோதா’வில், ‘பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும்’, ‘பெண்களுக்கு மணவிலக்கு செய்யும் உரிமை வேண்டும்’ என்ற அம்சங்களை அவர்கள் ஏற்கவில்லை. இந்து சட்டத்தொகுப்பு மசோதாவை சாதியச் சனாதனிகள் ஏற்காததால், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெண்களின் உரிமைகளுக்காகத் தன் பதவியைத் தூக்கியெறிந்தவர், அம்பேத்கர். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் தலைவரா? அவர் வெறுமனே சாதியம் குறித்து சிந்தித்தவரல்ல. இலக்கியம், தத்துவம், சமயம், பொருளாதாரம் என அவர் படிக்காத, எழுதாத துறைகள் கிடையாது. ‘ரிசர்வ் வங்கி’யை உருவாக்கியவர் அவர்தான். அவரது ஆய்வுப்படிப்பே இந்திய ரூபாயைப் பற்றித்தான். ‘தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேரம்தான் வேலைநேரம்’ என சட்டம் கொண்டுவந்தவர் அவர்தான். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

அம்பேத்கர் பற்றி அறியாதவர்கள், அவரை சாதித்தலைவராகச் சுருக்குகின்றனர். சாதியத்தின் அதிகாரத்தை ருசித்துக்கொண்டே அதைத் தக்கவைக்கத் துடிக்கும் சாதியத்தலைவர்களுடன், வாழ்நாள் முழுவதும் சாதியத்தின் இயங்கியல் குறித்து சிந்தித்து, அதை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க முயன்ற அம்பேத்கரையும் சாதியத் தலைவர் என்கின்றனர். யாருக்கு சாதியால் நன்மை விளையுமோ அவர்கள்தான் சாதியைக் காப்பாற்ற விரும்புவார்கள். ஆனால் அம்பேத்கரோ, தன் வாழ்நாள் முழுவதும் சாதியின் காரணமாக அவமானங்களைச் சந்தித்தவர். அவர் எப்படி சாதித்தலைவராக இருக்க முடியும்? அவர் முதன்முதலில் எழுதிய நூல், ‘இந்தியாவில் சாதிகள்’ 1916ல் வெளியானது. நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில் சாதி எப்படி உருவானது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்திருப்பார். இன்று நடக்கும் ஆணவக்கொலைகளுக்கான வேர்களை அவர் அதில் அடையாளம் காட்டியிருப்பார். அவர், சாதிகளின் தோற்றத்தையும் இயங்கியலையும் ஆராய்ந்தது, அதைக் காப்பாற்றுவதற்காக அல்ல, சாதியை ஒழிப்பதற்காக. அதனால்தான், ‘சாதி ஒழிப்பு’ என்னும் நூலை எழுதினார். அவர் வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மட்டும் கவலைகொண்டால், ஏன் ‘சூத்திரர்கள் யார்?’ என்ற நூலை எழுத வேண்டும்? சாதியை ஒழிப்பதற்காக சாதிமறுப்புத் திருமணம், இட ஒதுக்கீடு, மதமாற்றம் எனப் பல வழிமுறைகளையும் தன் வாழ்நாள் முழுக்க முயன்று பார்த்தவர் அவர். ஒருபுறம், அவருக்கு மதச்சாயம் பூசி தங்கள் அதிகாரத்துக்குள் விழுங்கப்பார்க்கிறவர்கள், இன்னொருபுறம் அம்பேத்கர் சிந்தனைகளின் செயற்பாடுகளின் அடித்தளங்களையே தகர்க்கப்பார்க்கிறார்கள்.



.

Previous Post

Gold Rate: தமிழ் புத்தாண்டு முதல்நாளிலேயே சரிந்த தங்கம்! சவரன் எவ்வளவு தெரியுமா?

Next Post

பாழடைந்த வீட்டின் கழிவறையில் கிடந்த சிறுமியின் சடலம்.. சைக்கோ பாலியல் குற்றவாளி என்கவுன்டர் – போலீஸ் அதிரடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாழடைந்த வீட்டின் கழிவறையில் கிடந்த சிறுமியின் சடலம்.. சைக்கோ பாலியல் குற்றவாளி என்கவுன்டர் – போலீஸ் அதிரடி!

பாழடைந்த வீட்டின் கழிவறையில் கிடந்த சிறுமியின் சடலம்.. சைக்கோ பாலியல் குற்றவாளி என்கவுன்டர் - போலீஸ் அதிரடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In