நடிகர் சிம்புவின் 49-வது படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
‘கட்சி சேர’, ‘ஆச கூட’, ‘சித்திர புத்திரி’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யா – 45, பிரதீப் ரங்கநாதன் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி கவனம் ஈர்த்தார்.
இதைவிட, இயக்குநர் அட்லி – அல்லு அர்ஜுன் படத்திற்கும் சாய் இசையமைக்க உள்ளது ஆச்சரியம் அளித்தது.