பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
இந்நிலையில், பெல்ஜியத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகை தந்திருத மெஹுல் சோக்ஸியை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மெஹுல் சோக்ஸிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளனர். சிபிஐயும் சோக்ஸிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.