அதாவது, இந்தத் தீர்ப்பு “காலாவதியான’ மசோதாவை மீட்டெடுப்பதற்கு வழி வகுத்திருக்கிறது. அரசியலமைப்பின் படி, மசோதா திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது ஜனாதிபதியால் அதற்கு ரத்து செய்யப்பட்டாலோ சட்டம் காலாவதியாகிவிடும்.
சட்டமன்றம் விரும்பியபடி, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுடன் அல்லது திருத்தமில்லாமல், அதை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்ககிய தீர்ப்பில் இது கருத்தில் கொள்ளப்படவில்லை.
மேலும், குடியரசுத் தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ் மாநில சட்டங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் மூலம் இறுதி முடிவை பரிசீலித்து அறிவிப்பதற்கான முதன்மை அமைச்சகம் உள்துறை அமைச்சகமாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மறுஆய்வு மனுவை, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அதே பெஞ்ச் முன் தாக்கல் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
