April 13, 20258:51 AM IST
Tamil Live Breaking News : குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு – சீராய்வு மனு?
ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பித்தற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் குடியரசுத் தலைவருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிக்கும் போது அவரின் வாதத்தை கேட்கவில்லை. குடியரசுத் தலைவர் பிரதிவாதியாக இல்லாத வழக்கில் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அட்டர்னி ஜெனரல் கருத்து.
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
