Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜகவில் இணைந்த சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர்.. பிரபலங்கள் வாழ்த்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 11, 2025
in அரசியல் செய்திகள்
0
பாஜகவில் இணைந்த சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர்.. பிரபலங்கள் வாழ்த்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 08, 2025 7:04 PM IST

பாஜகவுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்வதே எனது நோக்கம். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும், அதை முழு நேர்மையுடன் நிறைவேற்ற முயற்சிப்பேன்

News18News18
News18

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தோனியின் நெருங்கிய நண்பருமான கேதர் ஜாதவ் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்த கேதர் ஜாதவ் கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். 40 வயதான கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

ஐபிஎல்லில், கேதர் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளுக்காக 93 போட்டிகளில் விளையாடி மொத்தம் 1196 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் அணிகள் இவரை ஃபினிஷராக பயன்படுத்தின. தோனியின் நெருங்கிய நண்பராகவும் கேதர் ஜாதவ் உள்ளார்.

காயங்கள் மற்றும் ஃபார்மில் ஏற்பட்ட சரிவு காரணமாக 2020 க்குப் பிறகு அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் ஜூன் 3, 2024 அன்று தனது 39 வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கேதர் ஜாதவ் அரசியலில் தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியுள்ளார். இவர் அவர் மும்பையில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவில் இணைந்தது குறித்து கேதர் ஜாதவ் கூறியதாவது-

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு சென்ற விதமும், அதேபோல் முதல்வர் ஃபட்னாவிஸ் மகாராஷ்டிராவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் தலைமையில், பாஜக வளர்ச்சி அரசியலைச் செய்து வருகிறது. இந்த சிந்தனையுடன், நான் பாஜகவில் இணைகிறேன்.

இதையும் படிங்க – பெட்ரோல் மீதான கலால் வரி முதல் கேஸ் சிலிண்டர் உயர்வு வரை… நியூஸ் 18 மாநாட்டில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர்

2014 ஆம் ஆண்டு முதல், மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும், பிரதமர் மோடியும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் செய்த சாதனைகளும், எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாகக் கருதுகிறேன். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பாஜகவுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்வதே எனது நோக்கம். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும், அதை முழு நேர்மையுடன் நிறைவேற்ற முயற்சிப்பேன் என்று கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

First Published :

April 08, 2025 7:04 PM IST



.

Previous Post

வேலை பார்க்காமல் ஊதியம் பெறும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்!

Next Post

அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து

அதிமுக-பாஜக கூட்டணி: பவன் கல்யாண் வாழ்த்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In