Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

News18 Rising Bharat Summit 2025: ‘தேவை ஏற்படும்போதெல்லாம் உதவுபவராக பிரதமர் மோடி உள்ளார்’ – இஸ்ரேல் அமைச்சர் பாராட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 11, 2025
in அரசியல் செய்திகள்
0
News18 Rising Bharat Summit 2025: ‘தேவை ஏற்படும்போதெல்லாம் உதவுபவராக பிரதமர் மோடி உள்ளார்’ – இஸ்ரேல் அமைச்சர் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 08, 2025 7:45 PM IST

வேளாண்மைத் துறையில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் செய்யும்

இஸ்ரேல் வேளாண்மை அமைச்சர் இஸ்ரேல் வேளாண்மை அமைச்சர்
இஸ்ரேல் வேளாண்மை அமைச்சர்

தேவை ஏற்படும்போதெல்லாம் உதவி செய்பவராகவும், உண்மையான நட்பு பாராட்டுபவராகவும் பிரதமர் மோடி இருப்பதாக இஸ்ரேல் அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 குழுமம் டெல்லியில் “ரைசிங் பாரத்” என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. மொத்தம் 75 அமர்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விஐபிகள் பேசுகிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு, உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த “ரைசிங் பாரத்” மாநாட்டில் கருத்துரை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்றைய அமர்வின் போது இஸ்ரேல் நாட்டின் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆபிரகாம் மோசே கலந்து கொண்டு பேசியதாவது,

“2023 அக்டோபர் 7-ஆம் தேதி காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி பல்வேறு விதமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டார்கள். அந்த சமயத்தின் போது, முதல் உலகத் தலைவர்களில் முதல் நபராக பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருக்கு போன் செய்து, ‘என்ன தேவை வேண்டுமோ அதனை நிறைவேற்றித் தருவதாக’ உறுதி அளித்தார். அதுதான் உண்மையான நட்பாக இருக்க முடியும்.

இஸ்ரேல் மிகச் சிறிய நாடு. ஆனால், பல்வேறு விதமான பருவநிலைகள் அங்கு இருக்கும். பாலைவனம், பகுதி பாலைவனம், பசுமையான சூழல்கள் என வேளாண்மைக்கு பலதரப்பட்ட சூழல்கள் இஸ்ரேலில் காணப்படுகின்றன.

இதையும் படிங்க – நியூஸ் 18 குழுமம் ரைசிங் பாரத் மாநாடு… பிரதமர் மோடி முதல் நமல் ராஜபக்சே வரை உரையாற்றுகிறார்கள்

வேளாண்மைத் துறையில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் செய்யும். காசா உடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளோம். உடன்படிக்கையை நாங்கள் தான் முதலில் ஏற்படுத்தினோம். அதனை ஹமாஸ் அமைப்பு முறித்துக் கொண்டது. அதனால் தான், நாங்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

First Published :

April 08, 2025 7:45 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Rising Bharat Summit 2025: ‘தேவை ஏற்படும்போதெல்லாம் உதவுபவராக பிரதமர் மோடி உள்ளார்’ – இஸ்ரேல் அமைச்சர் பாராட்டு



.

Previous Post

மீன்வளத்துறையில் வேலை வேண்டுமா?

Next Post

BJP: குரு மூர்த்தி வீட்டில் அமித்ஷா! கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன்! கமலாலய வாசலை தொண்டு கும்பிட்டு சிக்னல்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
BJP: குரு மூர்த்தி வீட்டில் அமித்ஷா! கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன்! கமலாலய வாசலை தொண்டு கும்பிட்டு சிக்னல்?

BJP: குரு மூர்த்தி வீட்டில் அமித்ஷா! கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன்! கமலாலய வாசலை தொண்டு கும்பிட்டு சிக்னல்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In