இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இல்லத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதற்கும் நன்றி தெரிவித்தார். “பாஜக எங்களோடு துணைநிற்கிறது என்று கட்சித் தலைவர்கள் உறுதியளித்தனர். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

