கட்சியில் இருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்து இருக்கிறேன். கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா , மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி யார், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ். பி வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
