ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்
நடிகர் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று, ஏப்ரல் 10, 2025 அன்று தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த ஆக்ஷன் படத்தில் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தூத்துக்குடி மாநகரில் உள்ள மூன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடியிலுள்ள கிளியோபாட்ரா திரையரங்கிற்கு வருகை தந்தார். அவருக்கு அஜித் ரசிகர்கள் மேளதாளம் முழங்கி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர், ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர், தற்போது ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.
