Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Rising Bharat Summit 2025: ”சாலை விதிகளை யாரும் மீற முடியாது.. நான் இரு முறை அபராதம் செலுத்தினேன்” – அமைச்சர் நிதின் கட்கரி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 9, 2025
in அரசியல் செய்திகள்
0
Rising Bharat Summit 2025: ”சாலை விதிகளை யாரும் மீற முடியாது.. நான் இரு முறை அபராதம் செலுத்தினேன்” – அமைச்சர் நிதின் கட்கரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 08, 2025 8:25 PM IST

அமைச்சர் நிதின் கட்கரி ரைசிங் பாரத் மாநாட்டில், சாலை விதிகளை யாரும் மீற முடியாது, அவர் இரு முறை அபராதம் செலுத்தியதாக தெரிவித்தார். சுங்கச்சாவடி தொகை குறைக்கப்படும் என்றும் கூறினார்.

News18News18
News18

நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025-ல் பங்கேற்றுப் பேசிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும், என் காருக்கே இரு முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025 டெல்லியில் இன்றும், நாளையும் (8ஆம் தேதி & 9ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில், மொத்தம் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், 75க்கும் மேற்பட்ட அமர்வுகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.

ரைசிங் பாரத் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “மகாராஷ்டிரா மாநிலம், பாந்த்ரா – வோர்லி கடல் பாலத்தைக் கட்டியதே நான் தான். எனக்கு மும்பையில் ஒரு காரும் இருக்கிறது. அந்த காருக்கு இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டது. அதனால், நான் ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டியிருந்தது. கேமராக்கள் அனைத்தையும் படம்பிடிக்கின்றன. எனவே யாரும் தப்பிக்க முடியாது. மக்கள் அபராதங்கள் குறித்து எப்போது புகார் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் விதிகளை மீறாமல் இருப்பதில்லை. அதேபோல், அபராதம் என்பது வருவாய் ஈட்டுவதற்கானது அல்ல” எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : Rising Bharat Summit 2025: ‘தேவை ஏற்படும்போதெல்லாம் உதவுபவராக பிரதமர் மோடி உள்ளார்’ – இஸ்ரேல் அமைச்சர் பாராட்டு

மேலும், அவரிடம் சுங்கக் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, “சுங்கச்சாவடிகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு கொள்கை செயல்பாட்டில் உள்ளது. அது 8-10 நாட்களில் அறிவிக்கப்படும். சுங்கச்சாவடி தொகை 100% குறைக்கப்படும். இப்போதைக்கு அவ்வளவுதான் நான் வெளிப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாலை விபத்துக்களை 50% என குறைக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், தற்போதுவரை அந்த இலக்கை எட்ட முடியவில்லை. மக்கள் சாலை விதிகளைக் கற்க வேண்டும். சாலை தடுப்புகளை 3.25 அடி என உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். 30,000 விபத்துக்கள் தலைக்கவசம் இல்லாததால் நடந்திருக்கின்றன. அதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் விற்பனையாளர்கள் வாகனத்தோடு இரு தலைக்கவசங்களை விற்க வைக்க யோசித்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

First Published :

April 08, 2025 8:25 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Rising Bharat Summit 2025: ”சாலை விதிகளை யாரும் மீற முடியாது.. நான் இரு முறை அபராதம் செலுத்தினேன்” – அமைச்சர் நிதின் கட்கரி



.

Previous Post

TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி

Next Post

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை செளந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In