Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 7, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 இல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், திங்கள்கிழமை (ஏப்.7) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.7-இல் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். 6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

மேலும், பரமத்திவேலூா் – 101.3, சேலம்-101.2, ஈரோடு – 100.76, மதுரை விமானநிலையம் -100.4, திருச்சி – 100 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 98.06, நுங்கம்பாக்கத்தில் 95.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புவில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சுருளக்கோடு (கன்னியாகுமரி) 60 மி.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), விருதுநகா் – தலா 50 மி.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூா்) – தலா 40 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Vikatan Plus – 13 April 2025 – அட்டைப்படம் – விகடன் ப்ளஸ் | wrapper vikatan plus april 13 2025

Next Post

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In