Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

10 நாட்களாக நடைபயணம்..170 கி.மீ. ஆன்மிக பாத யாத்திரையை நிறைவேற்றிய ஆனந்த் அம்பானி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 6, 2025
in அரசியல் செய்திகள்
0
10 நாட்களாக நடைபயணம்..170 கி.மீ. ஆன்மிக பாத யாத்திரையை நிறைவேற்றிய ஆனந்த் அம்பானி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். குஜராத்தின் ஜாம் நகரில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் வந்தாரா என்ற உயிரினங்கள் மீட்பு மற்றும் மறு வாழ்வு மையத்தையும் ஆனந்த் அம்பானி நடத்தி வருகிறார்.

இந்த வந்தாரா உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறது. ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி உலக மகா கோடீஸ்வரர்கள் முதல் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்சன்டை திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் அவர் ஜாம்நகரில் தொடங்கி துவாரகா ஆதீஷ் கோயில் வரை 170 கிலோமீட்டர் தூரம் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு முன்பாக தனது பயணத்தை தொடங்கிய ஆனந்த் அம்பானி, ராம நவமியான இன்று பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தனது ஆன்மீக பயணம் குறித்து ஆனந்த் அம்பானி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ”கடவுளின் பெயரால் எனது ஆன்மிக பயணத்தை தொடங்கினேன். இது என்னுடைய ஆன்மீக யாத்திரை. பகவான் துவாரகாதீசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் பாதையாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த ஆன்மீக பயணத்தின் போது எனது தந்தை முகேஷ் அம்பானி தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

அவருக்கும் மிக்க நன்றி. பத்து நாட்களாக நடைபெற்ற எனது ஆன்மீக நடை பயணம் புனித ராம நவமியான இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது. எல்லோரையும் கடவுள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது பயணம் நிறைவேற ஓரிரு நாட்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

இருப்பினும் நான் ராம நவமி அன்று பயணத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பி கூடுதல் கிலோமீட்டர்களை நடந்தேன்” என்று தெரிவித்தார். அவரது இந்த ஆன்மீக பயணத்தில் தாயார் நீடா அம்பானி, மனைவி ராதிகா மெர்சன்ட் ஆகியோர் துவாரகாதிஷ் கோயிலில் இணைந்தனர்.

Anant Ambani Padyatra | ராம நவமியை ஒட்டி 10 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ஆனந்த் அம்பானி | Reliance #AnantAmbaniPadyatra #Reliance #Ramanavami #Padyatra #News18TamilNadu #TamiNews pic.twitter.com/mdx86gPvas


— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 6, 2025

தனது மகனின் ஆன்மீக பயணம் குறித்து நீடா அம்பானி கூறியதாவது, “ஒரு தாயாக எனது மகனை எண்ணி பெருமை கொள்கிறேன். என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. எல்லோருக்கும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும். ஆனந்துடன் 10 நாட்களாக நடந்து இளைஞர்கள் ஆன்மீக யாத்திரையை முடித்து நிறைவு செய்துள்ளனர். அவர்கள் நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரத்தை முன்னெடுத்து சென்றுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க – மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பிரதமர் மோடி

உடல்நலக் குறைவு ஏற்பட்ட போதிலும் ஆனந்த் அம்பானி அவற்றை பொருட்படுத்தாது தனது பாத யாத்திரையை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த பயணத்தின் போது உள்ளூர் மக்கள் ஆனந்த் அம்பானிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்னும் சிலர் அவருடன் பயணத்தில் இணைந்து கொண்டார்கள். ஆனந்த் அம்பானி இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த சில கோயில்களுக்கு புனரமைப்பு செய்ய நிதி உதவி வழங்கியுள்ளார்.

First Published :

April 06, 2025 4:27 PM IST



.

Previous Post

மலையாள சினிமாவில் முதல்முறை.. எம்புரான் ரூ.250 கோடி வசூல்!

Next Post

வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்சர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்சர்

வக்ஃப் சட்ட திருத்தத்தால் முஸ்லிம்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பலனடைவர்: மத்திய அமைச்சர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In