Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 6, 2025
in அரசியல் செய்திகள்
0
மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 06, 2025 3:58 PM IST

தமிழ்நாட்டில் 1400-க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் உள்ளன, அவற்றில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கிறது. – பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மருத்துவ படிப்பினை தமிழக அரசு தமிழில் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ரூ.535 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரம்பாண்ட நவீன புதிய பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது-

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதார அளவினை இரட்டிப்பு செய்துள்ளது. அதற்கு காரணம் நமது கட்டமைப்பு, ரயில், விமானம், மற்றும சாலை போக்குவரத்து உள்ளிட்டவற்றில் 6 சதவீத வளர்ச்சியை உயர்தியுள்ளோம்.

இந்த தேசத்தின் மெகா திட்டங்கள், பல திட்டங்கள் கொடுத்துள்ளோம், அதில் ஒன்று இந்த செங்குத்து பாம்பன் பாலம். புல்லட் ரயில் திட்டங்கள், வந்தே பாரத், நமோ பாரத் திட்டங்கள் போன்றவை ரயில்வே துறையை வளர்த்து வருகிறது.

2014 ரயில்வே துறைக்கு 900 ஆயிரம் ரூபாய் தமிழகத்திற்கு கிடைத்தது. அப்போது கூட்டணியில் யார் இருந்தார் என்று நான் கூற வேண்டும் என்று இல்லை. இந்த ஆண்டு 6000 கோடி ரூபாய ஒதுக்கப்பட்டுள்ளது. 77 ரயில் நிலையங்கள் தமிழகம் முழுவதும் புணரமைப்பு செய்து வருகிறோம், அதில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் ஒன்று.

தரமான மற்றும் விலை மலிவான, சிகிச்சை கொடுத்து வருகிறோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 1 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்கள் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு செலவில்லாமல் சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 1400-க்கும் அதிகமான மக்கள் மருந்தகங்கள் உள்ளன, அவற்றில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கிறது.

இதையும் படிங்க – இலங்கையில் தமிழர்களை சந்தித்த பிரதமர் மோடி.. 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதி

மருத்துவ படிப்பினை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது பெரும் ஆசை. இந்த படிப்பினை இளைஞர்கள் படிக்க முடிந்தால் அவர்களது தாய்மார்களும் பயனடைவார்கள். மருத்துவ படிப்பினை தமிழில் கொண்டு வாருங்கள் என்று மாநில அரசை வேண்டி விரும்பி கேகேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

First Published :

April 06, 2025 3:58 PM IST



.

Previous Post

பாம்பன் பாலம் திறப்பு!ஜெய் ஸ்ரீ ராம் முதல் அப்துல் கலாம் வரை! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Next Post

சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In