மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை வழங்காமல், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் “தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம்’ என்ற பேச்சை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். அதற்கு தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு எம்.பி-க்களை அவமதிக்கும் வகையில் ‘அநாகரிகமாவர்கள்’ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதைக் கண்டித்தும், மத்திய அரசின் ‘தேசியக் கல்விக் கொள்கை’, ‘தொகுதி மறுவரையறை’ திட்டங்களைக் கண்டித்தும் ‘தி.மு.க’ தீவிரமான ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல கேரளம், மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி தர மறுத்து வருவதால் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
