Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 வருட பழைய வீடியோவை வெளியிட்டு.. உரிமை தொகையை கிண்டல் செய்த கஸ்தூரி.. பாடம் எடுத்த நெட்டிசன்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 14, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
3 வருட பழைய வீடியோவை வெளியிட்டு.. உரிமை தொகையை கிண்டல் செய்த கஸ்தூரி.. பாடம் எடுத்த நெட்டிசன்கள்
60
SHARES
97
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: உரிமை தொகை திட்டம் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது.

யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்?:

குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்

ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்

5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்

திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும் ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

இது மூன்று வருட பழைய வீடியோ..! தனி நபர் உரிமை மீறல் மட்டுமல்லாமல் தற்போதைய வீடியோபோல் இருக்க எடிட் செய்யபட்டுள்ளது..! அரசின் திட்டத்தை தவறாக சித்தரிக்கும் நோகத்தோடும்,பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்த வீடியோவை வேண்டுமென்றே சமூக வளைதளத்தில் பரப்பியுள்ளார்..! @tnpoliceoffl… https://t.co/ATJNTqxpUY

— iRoBo_V3.0 (@iRoBo_V3) July 13, 2023

கடைக்கு போய் வாங்குவதோ குடிப்பதோ குற்றமல்ல. அது தனிப்பட்ட தேர்வு. ஆனால் அந்த பெண்களுக்கு தெரியாமல் அல்லது அவர்கள் அனுமதி இன்றி படம்பிடிப்பதும் அதை பொதுவெளியில் அனுமதி இன்றி மானமின்றி பகிர்தலும்தான் குற்றம். https://t.co/yYSOwKGLCu

— Athisha 😎 (@athisha) July 13, 2023

பழைய வீடியோ போடுற உன்னை விட, இந்த வீடியோ எடுத்தவனை விட, இந்த வீடியோவை தட்டி விட்டவரும், அந்த பொண்ணுங்களும் மேல்.. https://t.co/UkBlXcvYiu

— ஆல்தோட்டபூபதி (@thoatta) July 13, 2023

This is invasion of Privacy.. இவங்க அரசியல் ஆதாயத்துக்காக சின்ன பொண்ணுங்க Video வ எல்லாம் Share பண்ணிக்கிட்டு.. ச்சை.. 🤦‍♂️

உரிமைத்தொகை 1000 ரூபாய வெச்சு தண்ணி அடிப்பாங்க போயி எல்லா பெண்களும்னு சொல்லி Generalize பண்றதெல்லாம் எவ்ளோ கேவலமான ஒரு மனநிலை? 😡🚶 https://t.co/a4rElBdPX7

— தோழர் ஆதி (@RjAadhi2point0) July 13, 2023

இந்த திட்டம் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ள நிலையில்தான் உரிமை தொகை திட்டம் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அதில், பெண்கள் சிலர் டாஸ்மாக்கில் மது வாங்கும் காட்சிகளை வெளியிட்டு தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி. WhatsApp fwd of the day. As received. Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

3 வருட பழைய வீடியோவை பகிர்ந்து அவர் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார். அதோடு இந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தின் பாடல் வைக்கப்பட்டு புதிய வீடியோ போலவும் எடிட் செய்யப்பட்டு உள்ளது. அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவிற்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். அதன்படி நெட்டிசன்கள் பலரும், இது மூன்று வருட பழைய வீடியோ..! தனி நபர் உரிமை மீறல் மட்டுமல்லாமல் தற்போதைய வீடியோபோல் இருக்க எடிட் செய்யபட்டுள்ளது..! அரசின் திட்டத்தை தவறாக சித்தரிக்கும் நோகத்தோடும்,பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்த வீடியோவை வேண்டுமென்றே சமூக வளைதளத்தில் பரப்பியுள்ளார்

கடைக்கு போய் வாங்குவதோ குடிப்பதோ குற்றமல்ல. அது தனிப்பட்ட தேர்வு. ஆனால் அந்த பெண்களுக்கு தெரியாமல் அல்லது அவர்கள் அனுமதி இன்றி படம்பிடிப்பதும் அதை பொதுவெளியில் அனுமதி இன்றி மானமின்றி பகிர்தலும்தான் குற்றம். பழைய வீடியோ போடுற உன்னை விட, இந்த வீடியோ எடுத்தவனை விட, இந்த வீடியோவை தட்டி விட்டவரும், அந்த பொண்ணுங்களும் மேல்.. இது தனியுரிமை மீதான ஆக்கிரமிப்பு.. இவங்க அரசியல் ஆதாயத்துக்காக சின்ன பொண்ணுங்க Video வ எல்லாம் Share பண்ணிக்கிட்டு.. ச்சை.. உரிமைத்தொகை 1000 ரூபாய வெச்சு தண்ணி அடிப்பாங்க போயி எல்லா பெண்களும்னு சொல்லி Generalize பண்றதெல்லாம் எவ்ளோ கேவலமான ஒரு மனநிலை?, என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

Previous Post

மணிப்பூர்‌ கலவரம்‌: ஐரோப்பிய நாடாளுமன்றம்‌ கண்டனம்‌!

Next Post

சக்சஸ்! துல்லியமாக 16வது நிமிடத்தில் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சக்சஸ்! துல்லியமாக 16வது நிமிடத்தில் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3

சக்சஸ்! துல்லியமாக 16வது நிமிடத்தில் புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In