இந்த திட்டத்தை வகுத்திருப்பது முதல்வரோ, துணை முதல்வரோ அல்ல. அறுவர் குழு அதிகாரிகளே இம்முடிவை எடுத்துள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சீமா அகர்வாலோ, ராஜீவ் குமாரோ, சந்தீப் ராய் ராத்தோரோ தமிழக டிஜிபியாக வரக்கூடாது. அதற்கென அவர்கள் வகுத்த திட்டம்தான் இது. இந்த திட்டம் நடக்காது என்று நினைக்காதீர்கள். எதை நீட்டினாலும் கையெழுத்து போடும் பொம்மை முதல்வர் இருக்கையில் ஏன் நடக்காது? என குற்றம்சாட்டி உள்ளார். சவுக்கு சங்கரின் இந்த இடுகை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
