Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘ஆண்களுக்கு சம உரிமை இல்லையா?’ – மெட்ரோ ரயிலில் சீட்டிற்காக நடந்த வாக்குவாதம்.. வைரல் வீடியோ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 4, 2025
in அரசியல் செய்திகள்
0
‘ஆண்களுக்கு சம உரிமை இல்லையா?’ – மெட்ரோ ரயிலில் சீட்டிற்காக நடந்த வாக்குவாதம்.. வைரல் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 03, 2025 8:43 PM IST

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யாருக்கு சீட் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இருக்கை கொடுக்கலாம்.

News18News18
News18

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண் பயணி ஒருவருக்கு இடம் தர மறுத்து ஆண் பயணி வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ஆண்களுக்கு சம உரிமை இல்லையா?” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்கள்.

டெல்லி மெட்ரோ ரயிலில் ஜானக்புரி மேற்கு அருகே ப்ளூ லைன் வழித்தடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஆண் பயணி ஒருவர் கழுத்தில் இயர் போன் மற்றும் கையில் பேக் வைத்துக்கொண்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ஒரு பெண் அவரிடம் தனக்கு இடம் தருமாறு கூறினார்.

ஆனால் அதற்கு அந்த ஆண் பயணி சம்மதம் தெரிவிக்கவில்லை, தொடர்ந்து சீட்டில் அமர்ந்து வந்தார். அருகில் இருந்தவர்களும் அந்த பெண்மணிக்கு இடம் அளிக்குமாறு கேட்டனர். ஆனால் அவர் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால் மெட்ரோ ரயிலுக்குள் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு இருந்த பெண் ஒருவர் தனது செல்போனில் சம்பவத்தை ரெக்கார்டு செய்ய ஆரம்பித்தார்.

அவர், உங்களால் இந்த பெட்டி முழுவதுமே கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் அமைதியாக இருங்கள், பெரிய மனது பண்ணி அவருக்கு உட்கார இடம் கொடுங்கள்” என்று கூறினார். கடைசியாக சீட்டை விட்டு எழுந்திருத்த  ஆண் பயணி, “அடுத்ததாக தான் இறங்க வேண்டிய இடம் வருவதால் எழுந்திருப்பதாக” கூறினார்.

இதையும் படிங்க – பிரிந்து சென்ற மனைவி.. தொடர்ந்து அடம்பிடித்த மகள்.. டிரைவர் செய்த பதறவைக்கும் செயல்.. என்ன நடந்தது?

இந்த உரையாடல் சீரியஸாக இல்லாமல் ஜாலியாக நடந்துள்ளது. இதனை ஒரு பெண் பயணி வீடியோவாக எடுத்து வெளியிட அது தற்போது வைரல் ஆகி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் அளித்துள்ள கமெண்ட்கள் சுவாரஸ்யமாக உள்ளன. இது குறித்து நெட்டிசன்கள் கமெண்டில் கூறியிருப்பதாவது-

அது பெண்களுக்கான தனி இருக்கை இல்லையென்றால் எதற்காக அவர் எழுந்திருக்க வேண்டும்? ஆண்களுக்கு சம உரிமை இல்லையா? ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யாருக்கு சீட் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இருக்கை கொடுக்கலாம்.

இந்த சம்பவங்களை எதற்காக ஒருவர் ரிக்கார்ட் செய்துள்ளார்? சீட்டிலிருந்து எழுந்திருக்க விரும்புவதும் விரும்பாததும் அவரவர் விருப்பம் என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது ரியாலிட்டி ஷோ போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

First Published :

April 03, 2025 8:43 PM IST



.

Previous Post

Seeman: ’மூக்கையா தேவர் நேற்று முன் தினம் இறந்து இன்றைக்கு அடக்கம் செய்யப்பட்டாரா?’ ஸ்டாலினுக்கு சீமான் சரமாரி கேள்வி!

Next Post

‘அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீங்க.. பயங்கர பலமா இருக்காங்க’ கார்த்தி சிதம்பரம் பேட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீங்க.. பயங்கர பலமா இருக்காங்க’ கார்த்தி சிதம்பரம் பேட்டி

‘அதிமுகவை குறைத்து மதிப்பிடாதீங்க.. பயங்கர பலமா இருக்காங்க’ கார்த்தி சிதம்பரம் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In